சீன-தஜிகிஸ்தான் அரசுத் தலைவர்கள் சிறிய அளவிலான பேச்சுவார்த்தை
சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங், தஜிகிஸ்தான் அரசுத் தலைவர் எமோமாலி ரஹ்மானுடன் ஜூலை 5ஆம் நாள் பிற்பகல் துஷான்பே நகரில் சிறிய அளவிலான பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஷி ச்சின்பிங் கூறுகையில், நீண்டகால வரலாறு, வலிமையான அரசியல் அடிப்படை, செழுமையான ஒத்துழைப்பு உள்ளடக்கங்கள், பெருமளவிலான மக்களின் ஆதரவு ஆகியவற்றை சீன-தஜிகிஸ்தான் உறவு கொண்டுள்ளது. இரு தரப்புகளின் கூட்டு முயற்சியுடன், இரு நாடுகளின் ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கை தொடர்ச்சியாக ஆழமாகி வருகிறது. ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை கட்டுமானத்தின் ஒத்துழைப்புச் சாதனைகள் செழிப்பாக உள்ளன. பல முக்கிய திட்டப்பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. புதிய யுகத்தில் சீன-தஜிகிஸ்தான் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை வளர்க்க நாம் கூட்டாக அறிவிப்பதோடு, பல்வேறு துறைகளில் இரு நாட்டு ஒத்துழைப்புகளுக்குப் புதிய திட்டங்களை வகுப்போம் என்று தெரிவித்தார்.