ஆபிரிக்க ஒன்றிய ஆணையத்தின் தலைவர் யூசேஃப் எதியோபிய தலைநகர் அடிஸ் அபாபா நகரில், 9ஆம் நாள் சீன ஊடகக் குழுமத்திற்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
ஒரே சீனா என்ற கொள்கையில் ஊன்றி நிற்பது குறித்து, ஆபிரிக்க ஒன்றியம் எப்போதுமே சீனாவுடன் இணைந்து நிற்கும் என்றார்.
ஒரே சீனா என்ற கொள்கையை ஏற்று கொண்டு, நாங்கள் அதில் ஊன்றி நிற்கிறோம். ஆபிரிக்க கண்டத்தில் அதைப் போன்ற பிரச்சினை உள்ளது. சீனாவின் எல்லையும் ஆபிரிக்காவின் எல்லையும் புனிதமாக இருக்கின்றன. அண்மையில் நிகழ்ந்த சோமாலிலாந்து பிரச்சினை, ஆபிரிக்க கண்டம் எதிர்நோக்குகின்ற புதிய பிரச்சினையாகும்.
ஒரே சீனா என்ற கொள்கைக்கு ஆதரவு அளிப்பதன் மூலம், எங்களுக்கு நாங்களே உதவியளிக்கிறோம். ஆபிரிக்க கண்டத்தில் அதைப் போன்ற பிரச்சினை உள்ளது என்பது இதன் காரணமாகும் என்று யூசேஃப் தெரிவித்தார்.
