2025ஆம் ஆண்டு ஜொங்குவான்சுன் மன்றத்தின் ஆண்டு கூட்டம் மார்ச் 27ஆம் நாள் முதல் 31ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.
சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம், சீனத் தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையம், சீன அரசவை அரசுச் சொத்துக்கள் கண்காணிப்பு மற்றும் நிர்வாக ஆணையம், சீன அறிவியல் கழகம், சீனப் பொறியியல் கழகம், சீன அறிவியல் மற்றும் தொழில் நுட்பச் சங்கம், பெய்ஜிங் மாநகரின் அரசு ஆகியவை இக்கூட்டத்தைக் கூட்டாக ஏற்பாடு செய்கின்றன.
பல்வேறு நாடுகளிடையே உலகப் புத்தாக்கச் யோசனை மற்றும் வளர்ச்சி கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வது இம்மன்றத்தின் நோக்கமாகும்.
புதிய உயர்தர உற்பத்தி திறன்கள் மற்றும் உலக அறிவியல் தொழில் நுட்பத்தின் ஒத்துழைப்பு என்பது இவ்வாண்டு இக்கூட்டத்தின் தலைப்பாகும். அப்போது, மன்றக் கூட்டங்கள், தொழில்நுட்ப பரிவர்த்தனைகள், சாதனை அறிமுகம், முன்னேறிய போட்டிகள், துணை நடவடிக்கைகள் ஆகியவை நடத்தப்படும்.