சீனத் துணை அரசுத் தலைவர் ஹான் செங் 18ஆம் நாள் பெய்ஜிங்கில் இந்தியத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகரும், சீன-இந்திய எல்லைப் பிரச்சினைக்கான இந்தியச் சிறப்புப் பிரதிநிதியுமான தோவலைச் சந்தித்தார்.
ஹான் செங் கூறுகையில், சிறிது காலத்திற்கு முன் அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தலைமையமைச்சர் மோடியுடன் வெற்றிகரமாக சந்திப்பு நடத்தி, சீன-இந்திய உறவை மேம்படுத்தி வளர்ப்பது குறித்து முக்கிய ஒத்த கருத்தை எட்டியுள்ளார்.
அடுத்த ஆண்டு சீன-இந்திய தூதாண்மை உறவு நிறுவப்பட்டதன் 75ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டு தலைவர்கள் எட்டிய முக்கிய ஒத்த கருத்தை இரு தரப்பும் சீராக செயல்படுத்தி, உயர் நிலை தொடர்புப் போக்கினை நிலைநிறுத்தி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை வளர்த்து, அமைப்பு முறை தன்மையுடைய பேச்சுவார்த்தையையும், பொருளாதாரம், வர்த்தகம், பண்பாடு முதலிய துறைகளிலான பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பையும் படிப்படியாக மீண்டும் தொடங்கி, இரு நாட்டுறவு நிதானமாக வளர்ச்சியடையும் பாதைக்குத் திரும்புவதை முன்னேற்ற வேண்டும் என்றார்.
தோவல் கூறுகையில், சீனாவுடன் நெடுநோக்கு தொடர்பை வலுப்படுத்தி, ஒன்றுக்கொன்று நன்மை பயக்கும் ஒத்துழைப்பை விரிவாக்கி, இரு நாட்டுறவுக்கு புதிய இயக்காற்றலை வழங்க இந்தியா விரும்புவதாக தெரிவித்தார்.