தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி), மாணவர்களின் கணிதத் திறனை மேம்படுத்துவதற்காக நான்கு நாட்கள் கொண்ட ஒரு இன்டரேக்டிவ் (Interactive) பயிற்சியை அறிவித்துள்ளது.
‘செயற்கை நுண்ணறிவு மூலம் கணிதக் கற்றலை மேம்படுத்துதல்’ (Enhancing Mathematical Skills using AI) என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது.
நவீன காலத் தொழில்நுட்பமான ஏஐயைப் பயன்படுத்தி கணிதத்தை எளிமையாகவும் ஆர்வமாகவும் கற்பதே இதன் முக்கிய நோக்கமாகும்.
இந்த நான்கு நாள் ஆன்லைன் பயிற்சியானது, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குக் கணிதத்தின் சிக்கலான சூத்திரங்களை ஏஐ கருவிகள் மூலம் எப்படித் தீர்ப்பது என்பதைப் பயிற்றுவிக்கும்.
குறிப்பாக, கணிதப் பாடத்தில் உள்ள புதிர்கள், வடிவியல் மற்றும் இயற்கணிதம் போன்ற பகுதிகளைத் தொழில்நுட்ப உதவியுடன் அணுகுவது குறித்து விளக்கப்படும்.
கணிதத் திறனை மேம்படுத்த என்சிஇஆர்டி நான்கு நாள் இலவச ஏஐ பயிற்சி
