சீனாவில் பயணம் மேற்கொண்டுள்ள அயர்லாந்தின் தலைமை அமைச்சர் மைக்கேல் மார்ட்டின் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குப் சிறப்பு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில், 2026ஆம் ஆண்டில் சீனா வரவேற்ற முதலாவது ஐரோப்பிய நாட்டுத் தலைவராக இருக்கிறேன். அயர்லாந்து மற்றும் சீனாவின் நெகிழ்வான உறவை இது காட்டியுள்ளதாகத் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் சீனாவுடன் கூட்டாளியுறவை வலுப்படுத்தி நெடுநோக்கு பார்வையில் எதிர்காலத்தை நோக்கி பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகள் மற்றும் ஒருங்கிணைப்புகளை விரிவாக்குவது இப்பயணத்தின் நோக்கமாகும்.
அயர்லாந்து-சீன உறவின் வளர்ச்சி ஒன்றுக்கொன்று நன்மை தந்து கூட்டு வெற்றி பெறும் நட்புறவை நிரூபித்துள்ளது. சீனாவின் வளர்ச்சி சீன மக்களுக்கு மட்டுமல்ல, அயர்லாந்து உள்ளிட்ட பன்னாட்டு மக்களுக்கு வாய்ப்புகளைக் கொண்டு வந்துள்ளது. சீனாவுடன் இணைந்து, இரு நாட்டு நெடுநோக்குக் கூட்டாளியுறவை மேலும் முன்னேற்ற எதிர்பார்ப்பதாகவும், ஐரோப்பிய-சீன உறவின் சுமுகமான வளர்ச்சிக்கு ஆக்கப்பூர்வமான பங்காற்ற விரும்புவாதகவும் அவர் தெரிவித்தார்.
