சீனாவில் நிலவி வரும் “தனிமைத் தொற்று”(Loneliness Epidemic) காரணமாக, “Si Le Me”(தமிழில்:”நீங்கள் இறந்துவிட்டீர்களா?”) என்ற செயலி அந்நாட்டின் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் முதலிடத்தை பிடித்துள்ளது.
தனிமையில் வசிப்பவர்கள் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால், அதை மற்றவர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
பயனர் ஒரு குறிப்பிட்ட நேர இடைவெளியில்(வழக்கமாக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை) செயலியை திறந்து அதில் உள்ள ஒரு பொத்தானை அழுத்த வேண்டும்.
இதன் மூலம் அவர் உயிரோடு இருப்பதை உறுதி செய்யலாம்.
ஒருவேளை பயனர் அந்தப் பொத்தானை அழுத்தத் தவறினால், செயலி தானாகவே அவர் ஏற்கனவே பதிவு செய்துள்ள அவசர காலத் தொடர்பு நபருக்கு(Emergency Contact) மின்னஞ்சல் அல்லது குறுஞ்செய்தி மூலம் எச்சரிக்கை அனுப்பும்.
நீங்கள் இறந்துவிட்டீர்களா? சீனாவை அதிரவைக்கும் விசித்திரமான செயலி
