சீன கம்யூனிஸ்ட் கட்சி 20ஆது மத்திய கமிட்டி ஒழுங்கு பரிசோதனைக்கான ஆணையத்தின் 5ஆவது முழு அமர்வில், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொது செயலாளரும் அரசுத் தலைவரும் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவருமான ஷி ச்சின்பிங் 12ஆம் நாள் முக்கிய உரை நிகழ்த்தினார். அவர் தனது உரையில் கூறும் போது,
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையை வலுப்படுத்தி, உயர் வரையறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு சீன கம்யூனிஸ்ட் கட்சி பற்றிய நிர்வாகப் பணியை பன்முகங்களிலும் முன்னேற்ற வேண்டும். சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் முக்கிய தீர்மானங்களையும் கட்டளைகளையும் உறுதியாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதிகாரத்தை அமைப்பு முறை கூண்டுகளில் அடைக்க வேண்டும். உழல் எதிர்ப்பு பணியைத் தெளிவாகவும் உறுதியாகவும் முன்னேற்ற வேண்டும். 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் இலக்குகளை நனவாக்குவதற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஷி ச்சின்பிங் கூறினார்.
