பிரான்ஸில் பயணம் மேற்கொண்டுள்ள சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் ஜுன் 22ஆம் நாளன்று பிரான்ஸ் அரசுத் தலைவர் இம்மானுவேல் மக்ரோன் மற்றும் தலைமை அமைச்சர் எலிசபெத் போர்னையைச் சந்தித்தார்.
மக்ரோனைச் சந்தித்து லீச்சியாங் பேசுகையில்
சீனா மற்றும் பிரான்ஸ், சீனா மற்றும் ஐரோப்பியா, தத்தமது சாதகங்களைக் கொண்டு, மேலும் ஒத்துழைப்பைப் பலப்படுத்த வேண்டும். அணு ஆற்றல், விமானம் மற்றும் விண்வெளி ஆகிய பாரம்பரிய துறைகளில் ஒத்துழைப்பை ஆழமாக்கும் அதேவேளையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, எண்ணியல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு, மேம்பட்ட தயாரிப்பு ஆகிய புதிய துறைகளில் ஒத்துழைப்பு வாய்ப்புகளைத் தேடி கண்டுபிடிக்கும் அடிப்படையில், ஒன்றுக்கு ஒன்று நன்மை தரும் இலக்கை நனவாக்க வேண்டும் என்று சுட்டிக்காட்டினார்.
தலைமை அமைச்சர் போர்னையுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கூறுகையில், இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பை புதிய நிலைக்கு கொண்டு வர சீனா பிரான்ஸுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறது என்று லீச்சியாங் குறிப்பிட்டார். பிரான்ஸ் தொடர்ந்து நேர்மறைப் பங்களிப்புடன் செயல்பட்டு, சீனா மீதான புறநிலை மற்றும் பகுத்தறிவு ரீதியான புரிதல் மற்றும் கொள்கையை ஐரோப்பா உருவாக்குவதை முன்னேற்றுவதாகவும் இந்நிலையில் சீன-ஐரோப்பிய ஒத்துழைப்புக்கு வழிவகுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பேச்சுவார்த்தைக்குப் பிறகு, தலைமை அமைச்சர்களின் முன்னிலையில், இரு நாடுகளிடையேயான பல ஒத்துழைப்பு ஆவணங்கள் கையெழுத்தாகியுள்ளன.