மகாராஷ்டிரா மாநில உள்ளாட்சித் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு வைக்கப்பட்ட மை எளிதில் அழிந்துவிடுவதாக ராஜ் தாக்கரே குற்றம்சாட்டியிருந்தார். இது குறித்து மாநில தேர்தல் ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், தேர்தல் ஆணையம் மக்களைத் தவறாக வழிநடத்துவதால் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாகவும், வாக்குத் திருட்டு என்பது ஒரு தேச விரோதச் செயல் என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
இதற்குப் பதிலடி கொடுத்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே ராகுல் காந்தி தோல்வியை ஒப்புக்கொண்டு சாக்குப்போக்குகளைத் தேடுவதாகக் கூறியுள்ளார்.
எப்போதும் போல தவறான தகவல்களைப் பரப்பி தேர்தல் ஆணையத்தை இழிவுபடுத்துவதே ராகுலின் வேலை என்றும், தோல்வி பயத்தால் அவர் இது போன்ற கருத்துகளைக் கூறி வருவதாகவும் பாஜக விமர்சித்துள்ளது.
