2024ஆம் ஆண்டு சீன-அமெரிக்க கடல் இராணுவப் பாதுகாப்புக் கலந்தாய்வு அமைப்புமுறைக்கான பணிக்குழு கூட்டத்தை இரு நாட்டுப் படைகள் ஏப்ரல் 3 மற்றும் 4ஆம் நாள் ஹவாயில் நடத்தின.
இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துகளைச் செயல்படுத்தி, இரு நாட்டு இராணுவ உறவின் சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சியை முன்னேற்றுவது, இக்கூட்டத்தின் நோக்கமாகும்.
சமத்துவமான மற்றும் மதிப்பான அடிப்படையில், தற்போது சீன-அமெரிக்க கடல் மற்றும் வான் பாதுகாப்புச் சூழ்நிலை குறித்து இரு தரப்பும் மனம் திறந்து உரையாடி, சீன-அமெரிக்க கடல் இராணுவப் பாதுகாப்பு நிலைமையை மேம்படுத்தும் நடவடிக்கைகளை விவாதித்தன.
அனைத்து ஆக்கிரமூட்டல் நடத்தையும் சீனப் படை தொடர்ந்து சட்டப்படி பதில் அளித்து, சொந்த அரசுரிமை மற்றும் கடல் உரிமையையும், பிரதேச அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழுமையையும் பேணிக்காக்கும் என்று சீனத் தரப்பு சுட்டிக்காட்டியது.