சீனாவின் ஷென்சோ-20 எனும் விண்வெளி கலம் 19ஆம் நாள் முற்பகல், தோங்ஃபான் தரையிறங்கும் தளத்திற்கு வெற்றிகரமாகத் திரும்பியது. சீனாவின் விண்வெளி நிலையத்தில் மேற்கொண்ட அவசர நடவடிக்கையின் முக்கிய கடமை தடையின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீனாவின் ஷென்சோ-20 விண்வெளி கலம் 2025ஆம் ஆண்டின் ஏப்ரல் திங்கள் 24ஆம் நாள், ஜியுச்சுவன் செயற்கைக்கோள் ஏவு தளத்திலிருந்து வெற்றிகரமாக விண்ணுக்கு ஏவப்பட்டு, விண்வெளி நிலையத்துடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டது. நவம்பர் திங்களில், விண்வெளியிலிருந்து சிறிய துண்டுகளால் தாக்கப்பட்டதால், பூமிக்குத் திரும்பும் திட்டம் ஒத்திப்போடப்பட்டு, வட்டப் பாதையில் தங்கி தொடர்புடைய ஆய்வுகளை மேற்கொண்டது. இக்கலம் 270 நாட்களாக விண்ணில் பறந்து, 9 திங்கள் காலம் விண்வெளி வட்டப்பாதையில் தங்கும் ஆற்றலைக் கொண்டிருப்பதை வெளிக்காட்டியது.
