பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி நடத்தப்படுவதை எதிர்க்கும் எதிர்க்கட்சி குழுவில் AIMIM தலைவர் அசாதுதீன் ஒவைசியும் இணைந்துள்ளார்.
செப்டம்பர் 14 அன்று நடைபெறவிருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு எதிராக அவர் வெளியிட்ட கருத்து, தேசிய அளவில் புதிய விவாதத்திற்குத் தூண்டிவைத்துள்ளது.
மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட 2025 ஆசியக் கோப்பை அட்டவணையின் படி, இந்தியா-பாகிஸ்தான் குழு நிலை போட்டி செப்டம்பர் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் இந்தியா கலந்துகொள்வதாக இரு தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
ஆனால், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் ஆடும் முடிவை AIMIM எம்.பி. ஒவைசி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்தியா-பாகிஸ்தான் ஆசியக் கோப்பை போட்டி : அசாதுதீன் ஒவைசி கண்டனம்
