மக்கெள தாய்நாட்டுக்குத் திரும்பிய 25ஆவது ஆண்டு நிறைவுக்கான கலை நிகழ்ச்சி டிசம்பர் 19ஆம் நாளிரவு மக்கௌ கிழக்கு ஆசிய விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டிப் பொதுச் செயலாளரும், சீன அரசுத் தலைவரும், மத்திய ராணுவ ஆணையத் தலைவருமான ஷிச்சின்பிங் இதனைக் கண்டுரசித்தார்.
இந்த நிகழ்ச்சியானது பார்வையாளர்களின் பெரிய கைத் தட்டலைப் பெற்றது. கலை நிகழ்ச்சியின் இறுதியில், ஷிச்சின்பிங் பார்வையாளர்களுடன் இணைந்து பாடலைப் பாடி தாய்நாடு மேலும் செழுமையாகவும் மக்கௌவின் எதிர்காலம் மேலும் அருமையாகவும் திகழ வாழ்த்து தெரிவித்தார்