சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலையை மாற்றியமைத்து வருகின்றன.
அந்த வகையில், பிப்ரவரி மாதத்தின் முதல் நாளான இன்று வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் வணிகப் பயன்பாட்டு சிலிண்டரின் விலை ₹50 உயர்த்தப்பட்டு, தற்போது ₹1,899.50 ஆக விற்பனை செய்யப்படுகிறது.
இந்த திடீர் விலை உயர்வு உணவக உரிமையாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்களுக்குக் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம், இல்லத்தரசிகளுக்குச் சற்று நிம்மதி அளிக்கும் வகையில், வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
சென்னையில் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் ₹868.50 என்ற பழைய விலையிலேயே நீடிக்கிறது. வணிக சிலிண்டர் விலை உயர்ந்தாலும், வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாறாமல் இருப்பது நடுத்தரக் குடும்பங்களுக்குப் பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.
