இந்தியா மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கிடையே, எல்லை தாண்டிய பரிவர்த்தனைகளுக்கு ரூபாய் மற்றும் ரூபியா பயன்பாட்டை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இது, இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையிலான பரிவர்த்தனைகளுக்கு உள்ளூர் நாணயங்களைப் பயன்படுத்துவதற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் மற்றும் இந்தோனேசியா வங்கியின் ஆளுநர் பெர்ரி வார்ஜியோ ஆகியோர் கையெழுத்திட்டனர். இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதில், ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்தியாவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் உள்ளூர் நாணயங்களில் எல்லை தாண்டிய பரிவர்த்தனைகள் துறையில் ஒத்துழைப்பிற்கான கட்டமைப்பை உருவாக்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இருதரப்பு ரூபாய் (INR) மற்றும் ரூபியா (IDR) பயன்பாட்டை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அனைத்து நடப்புக் கணக்கு பரிவர்த்தனைகள், அனுமதிக்கப்பட்ட மூலதனக் கணக்கு பரிவர்த்தனைகள் மற்றும் இரு நாடுகளும் ஒப்புக்கொண்ட பிற பொருளாதார மற்றும் நிதி பரிவர்த்தனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.
இதன் மூலம் ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் உள்நாட்டு நாணயங்களில் பணம் செலுத்த முடியும்.