இந்திய ராணுவம் தனது ஆயுத பலத்தை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், உலகிலேயே முதல்முறையாக ரேம்ஜெட் (Ramjet) தொழில்நுட்பத்தால் இயங்கும் பீரங்கி குண்டுகளைப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது.
பொதுவாக ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் ரேம்ஜெட் தொழில்நுட்பம், இப்போது இந்திய ராணுவத்தால் பீரங்கி குண்டுகளில் புகுத்தப்பட்டுள்ளது.
இதன்மூலம், பீரங்கியிலிருந்து குண்டு ஏவப்படும்போது, அது காற்றில் மிக அதிவேகமாக (Mach 2) பயணிக்கும்.
அப்போது காற்று தானாகவே அழுத்தப்பட்டு, எரிபொருளுடன் இணைந்து உந்துவிசையை உருவாக்குகிறது.
இதில் தனியாக டர்பைன்கள் அல்லது கம்ப்ரசர்கள் கிடையாது. இது காற்றின் மூலமே இயங்குவதால், மற்ற குண்டுகளை விட அதிக தூரம் பயணிக்கும் திறன் கொண்டது.
உலகிலேயே முதல்முறை! இந்திய ராணுவ பீரங்கிகளில் ரேம்ஜெட் குண்டுகள் பயன்பாடு
