ஆளுநர் பதவியை தமிழிசை சௌந்தரராஜன் ராஜினாமா செய்ததை தொடர்ந்து, ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்புகள் வழங்கி குடியரசு தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
நேற்று அதிரடி திருப்பமாக, நாடாளுமன்ற தேர்தலில் களம் இறங்க முடிவெடுத்த தமிழிசை சௌந்தரராஜன், தனது ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் வாயிலாக ஜனாதிபதிக்கு தெரிவித்தார்.
தற்போது அந்த ராஜினாமாவை குடியரசு தலைவர் ஏற்று கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக, அடுத்தக்கட்ட ஏற்பாடுகள் செய்யப்படும் வரை, தெலுங்கானா மற்றும் புதுவை துணை நிலை ஆளுநர் பொறுப்பை ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு வழங்குவதாக குடியரசு தலைவர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழிசை, பாஜக சார்பில் தமிழகத்திலிருந்து போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார்.