தவறான விளம்பரங்களை பரப்பிய வழக்கில் அவமதிப்பு நோட்டீசுக்கு பதிலளிக்கத் தவறியதற்காக, பதஞ்சலி ஆயுர்வேத் நிறுவனத்தை உச்ச நீதிமன்றம் இன்று கடுமையாக சாடியது. மேலும், பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
நீதிபதிகள் ஹிமா கோலி மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வு, பதஞ்சலி நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பால்கிருஷ்ணாவுக்கும் சம்மன் அனுப்பியுள்ளது.
பதஞ்சலி ஆயுர்வேத் என்பது யோகா குரு ராம்தேவால் இணைந்து நிறுவப்பட்ட நிறுவனமாகும்.
தடுப்பூசி மற்றும் நவீன மருந்துகளுக்கு எதிராக ராம்தேவ் அவதூறு பிரச்சாரம் செய்ததாக கடந்த வருடம் இந்திய மருத்துவ சங்கம் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.