“எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள்”- மோடி பரபரப்பு

Estimated read time 1 min read

எனக்கு சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள் என எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

ராஜ்யசபாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, “சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் எனக்கு எதிர்க்கட்சிகள் சவக்குழி தோண்டப் பார்க்கிறார்கள்.

காந்தி குடும்பத்தினர் பிரதமர் பதவியை தங்களின் குடும்பச் சொத்து என்று கருதுகிறார்கள். உலகின் தென் பிராந்திய குரலாக இந்தியா திகழ்கிறது. உலக அளவில் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட முக்கிய நாடுகளுடன் 9 ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளோம். சமீபத்திய ஒப்பந்தங்கள் தொடர்பாக உலகமே பாராட்டுகிறது.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த பிரதமர்களை விட நான் வேகமாக செயல்படுகிறேன். நாட்டின் நலனில் அக்கறை இல்லாமல் எதிர்கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர். இந்திய வளர்ச்சியை பாராட்ட எதிர்கட்சியினருக்கு மனமில்லை.

காஷ்மீரில் 370 சிறப்பு சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தோம். பாகிஸ்தான் பயங்கரவாதம், இடதுசாரி தீவிரத்தை ஒழித்தோம். இதனால் எதிர்கட்சியினர் எனக்கு சவக்குழி தோண்ட பார்க்கின்றனர். இந்தியாவின் ஒவ்வொரு குடிமக்களின் ஆசிர்வாதமும் எனக்கு இருக்கிறது. எனவே எதிர்க்கட்சிகளின் அவதூறுப் பேச்சுக்கள் என்னை ஒன்றும் செய்யாது. தேர்தல்கள் வரும் போகும். ஆனால் இந்தியாவை வளர்ந்த நாடு என்ற இடத்தில் வைத்துப் பார்ப்பதுதான் எனது இலக்கு. 2047-ல் இவர் என்ன இருந்து வளர்ந்த இந்தியாவை பார்க்கவா போகிறார்? பிறகு ஏன் எப்போது பார்த்தாலும் அதைப் பற்றிய பேசுகிறார் என எதிரில் இருப்பவர்கள் என கேட்கிறார்கள் இப்படி நமது சுதந்திரப் போராட்ட வீரர்கள் கருதி இருந்தால் நமக்கு சுதந்திரம் கிடைத்திருக்குமா?” எனக் கேள்வி எழுப்பினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author