பல்லாவரம் ரேடியல் சாலை பாமக மாநில மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் பாமக தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், “திமுக தலைவர் ஸ்டாலின் 45 ஆண்டுகாலம் அவர் சார்ந்த கட்சிக்கு உழைத்துள்ளார், அதில் மாற்று கருத்து இல்லை, தற்குறி என இளைஞர்களை விமர்சித்த நிலையில் அவர்கள் ஆட்சியை பிடித்துள்ளனர். கூட்டணி தோற்றுவிட்டது வருத்தம் தான், ஆனால் தேர்தலுக்கு பிறகு இப்போது பாமகவுக்கு புது உத்வேகம் கிடைத்துள்ளது. பயிர் எது? களை எது என தெரிந்துவிட்டது, பணம் தேவையற்றது என இந்த தேர்தல் தெரிவித்துள்ளது. நமது கட்சியில் தொகுதி கேட்டு பலகோடி செலவு செய்வேன் என விருப்ப மனு கொடுத்தவர் சாப்பாடு கூட வாங்கி தரவில்லை என புகார் தெரிவித்தார். அவரிடம் மிகப்பெரிய 3 கார் இருந்தது, ஆனால் ஏன் இதுபோல் பேசவேண்டும்?
முதல்வர் தவெக விஜய் என்னை சந்தித்து பேசினார். அவரிடன் சமுக நீதி கணக்கெடுப்பு எடுங்கள். போதை ஒழிப்பு, சிங்கப்பெண் திட்டம் உள்ளிட்டவைகளுக்கு ஆலோசனை வழங்கினேன். தற்போது தவெக கட்சி கொள்கைகள் 90 சதவிகிதம் பாமகவுடன் ஒற்று போகிறது. மக்கள் பலன் பெற வேண்டும், அதற்காக பாமக செயல்படும், பாமக கட்சிக்குள் தற்போது ஜி.கே மணி இல்லை, இதுபோல் மறு சீரமைப்பு நடைபெறும். நல்ல நேர்மையான முறையில் கருத்து கேட்டு ஒட்டுமொத்த டீம் ஒர்க் செய்பவர்கள் களத்தில் இருப்பார்கள், காசு செலவு பன்றவங்க மட்டும் வேண்டாம். ஆட்சிக்கு வருவதில் இடைகால தடை ஏற்பட்டுள்ளது. அடுத்து உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது, எல்லா நிர்வாகிகளும் தயாராக இருங்கள்” என்றார்.
