இந்திய திரைப்பட கூட்டமைப்பு (FFI), 2027 ஆம் ஆண்டு அகாடமி விருதுகளுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் இந்தியாவின் அதிகாரப்பூர்வ பரிந்துரையை செவ்வாய்க்கிழமை அன்று அறிவிக்க உள்ளது.
இந்த அறிவிப்பு, மும்பையில் உள்ள ‘தி கிளப்’-பில் பிற்பகல் 2:30 மணிக்கு வெளியிடப்படும் என பிடிஐ செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு, இஷான் கட்டர் மற்றும் விஷால் ஜெத்வா நடித்த ‘ஹோம்பவுண்ட்’ என்ற சமூக நாடகத் திரைப்படம், ஆஸ்கர் விருதுகளில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்த அனுப்பப்பட்டது.
2027 ஆஸ்கர் விருதுகளுக்கான இந்தியாவின் பட்டியல் இன்று அறிவிக்கப்படும்
