நீட் நுழைவுத் தேர்வின் முடிவில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு ஜூன் 21ம் தேதி நடத்தப்பட்ட நிலையில் அதற்கான முடிவுகளை கடந்த மாதம் தேசிய தேர்வு முகமை வெளியிட்டது.
20 லட்சம் பேர் எழுதிய இந்த தேர்வில் 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த வெங்கடபதி வேலாயுதம் என்பவர் 12ம் இடத்தை பிடித்து சாதனை படைத்தார்.
இதேப் போல 690 மதிப்பெண்ணுக்கு மேல் பெற்று சாதனை படைத்தவர்கள் பட்டியலில் ஸ்ரீநிகா, சுடர், வனிஷா சதீஷ், சபரி, ஜெய்கிருஷ்ணா, சம்விதா உள்ளிட்ட 12 தமிழக மாணவர்கள் இடம் பிடித்து அசத்தினர்.
மேலும், அதிக மதிப்பெண் எடுத்த முதல் நூறு பேரில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 9 பேர் ஆவர். மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு தொடங்க உள்ள நிலையில் தமிழக மாணவர்களின் சாதனை இனிவரும் தலைமுறை மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக உள்ளது.
