தர்மேந்திரா என்று அழைக்கப்படும் தரம் சிங் தியோல் இந்திய சினிமாவில் ஒரு புகழ்பெற்ற நடிகர், தயாரிப்பாளர் மற்றும் அரசியல்வாதி ஆவார். ‘பாலிவுட்டின் ஹீ-மேன்’ (He-Man) என்று அவர் செல்லமாக அழைக்கப்படுவார். 1997 ஆம் ஆண்டில், இந்தி சினிமாவுக்கு இவர் செய்த பங்களிப்புக்காக பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றார்.
இவர் இந்தியத் திரைப்படத்துறை வரலாற்றில் மிக வெற்றிகரமான நடிகர்களில் ஒருவர் ஆவார். இவரது மிகவும் குறிப்பிடத்தக்க பாத்திரங்களில் ஒன்று 1975 ஆம் ஆண்டு வெளியான ஷோலே திரைப்படப் பாத்திரமாகும். இவர் ராஜஸ்தானில் உள்ள பிகானேர் தொகுதியில் இருந்து பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்தியாவின் 14 வது மக்களவையில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டார். 2012 ஆம் ஆண்டில், இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது மிக உயர்ந்த விருதான பத்ம பூசண் விருது இவருக்கு இந்திய அரசால் வழங்கப்பட்டது.
தர்மேந்திரா தேசிய அளவில் புகழ்பெற்ற பிலிம்பேர் பத்திரிகையின் நியூ டேலண்ட் அவார்ட் என்ற விருதை வென்று அங்கு வாக்குறுதியளிக்கப்பட்ட திரைப்படத்தில் பணியாற்றுவதற்காக, பஞ்சாபிலிருந்து மும்பைக்குச் சென்றார். ஆனால் அந்தப்படம் படம் தயாரிக்கப்படவில்லை. பின்னர் இவர் 1960 இல் அர்ஜுன் ஹிங்கோரானியின் தில் பீ தேரா ஹம் பீ தேரே படத்தில் அறிமுகமானார். 1961 ஆம் ஆண்டில் பாய் ஃப்ரெண்ட் படத்தில் இவர் ஒரு துணை வேடத்தில் நடித்தார். பின்னர் 1960 மற்றும் 1967 க்கு இடையில் பல காதல் படங்களில் நடித்தார்.
முதுபெரும் பாலிவுட் நடிகர் தர்மேந்திரா அவர்கள் தனது 89-வது வயதில் காலமானார்.
धर्मेंद्र का 89 की उम्र में निधन, लंबी बीमारी से जूझ रहे थे हिंदी सिनेमा के ‘ही-मैन’, एक्टर के घर पहुंचे अमिताभ बच्चन था, लेकिन अब धर्मेंद्र ने दुनिया को अलविदा कह दिया है. #DharmendraDeol #Dharmendra #HeMan #Bollywood #AmitabhBachchan pic.twitter.com/P9GWTi5sPw
— ETVBharat Rajasthan (@ETVBharatRJ) November 24, 2025
