தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோர் விருப்ப மனு அளிக்கலாம் என அறிவித்துள்ளார்.
இதற்கான விண்ணப்பங்கள் பிப்ரவரி 6 முதல் பிப்ரவரி 12 வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை விநியோகம் செய்யப்படும் என்றும், பூர்த்தி செய்யப்பட்ட மனுக்களைச் சென்னை தலைமை அலுவலகத்தில் பிப்ரவரி 12-ம் தேதி மாலை 5 மணிக்குள் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டணமாகப் பொதுத் தொகுதிக்கு 15,000 ரூபாயும், தனித் தொகுதிக்கு 10,000 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
