பாரத்ஜென் ஏஐ: இந்த மாத இறுதிக்குள் 22 இந்திய மொழிகளிலும் சேவை தொடக்கம்  

Estimated read time 1 min read

இந்திய அரசின் அதிகாரப்பூர்வ பன்மொழி செயற்கை நுண்ணறிவு இயந்திரமான பாரத்ஜென் (BharatGen), இந்த மாத இறுதிக்குள் அரசியலமைப்பின் 22 அதிகாரப்பூர்வ மொழிகளிலும் தனது உரை சேவைகளை முழுமையாக வழங்கும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
பாஜக உறுப்பினர் புவனேஸ்வர் கலிதாவின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், இது ஒரு தொடர்ச்சியான செயல்முறை என்றும், எதிர்காலத்தில் இன்னும் பல வட்டார மொழிகள் மற்றும் கிளை மொழிகள் இதில் சேர்க்கப்படும் என்றும் கூறினார்.

You May Also Like

More From Author