சீனா தொடர்ந்து 17 ஆண்டுகளாக உலகில் இரண்டாவது பெரும் ஏற்றுமதிச் சந்தையாகத் திகழ்ந்து வருகின்றது. தற்போது, 15ஆவது ஐந்தாண்டு திட்டம் துவங்கியதோடு, உயர் தர வாழ்க்கை மீதான மக்களின் தேவைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இதனிடையே, சீனச் சந்தையின் மாபெரும் நுகர்வு ஆற்றலும் ஏற்றுமதி வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
கடந்த சில ஆண்டுகளாக சீனா உலகத்திற்குத் தன் சந்தையைத் தொடர்ந்து திறந்து வருகிறது. சீனாவின் தற்போதைய மொத்த சுங்க வரி நிலை 7.3 விழுக்காட்டுடன், உலகளவில் குறைந்த அளவில் உள்ளது. இது தொடர்பில் சீன வணிகத் துறை அமைச்சகம் சமீபத்தில் வெளியிட்ட தரவுகளின்படி, 2026ஆம் ஆண்டில், சீனாவுக்கு ஏற்றுமதி தொடர்பாக 100க்கும் மேலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இதில் அமெரிக்கா, கசக்ஸ்தான், கென்யா, தாய்லாந்து முதலிய நாடுகள் முதன்மையான நாடுகளாக அழைக்கப்படும். மேலதிகமான உயர் தர வணிகப் பொருட்கள் மற்றும் சேவைகள் சீனாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கைக்குச் சேவை புரியும்.
புதிய ரக உற்பத்தி ஆற்றலைச் சீனா வெகுவாக வலுப்படுத்தி வருவதன் காரணமாகப் பல வெளிநாட்டு நிறுவனங்கள், சீனாவின் நுகர்வுச் சந்தையைக் கூட்டாகப் பகிர்ந்துகொண்டு சீனச்சந்தையில் புத்தாக்கம் செய்யலாம். இச்சந்தையானது ஒரு பயன்பாட்டுச் சந்தையாகவும் விளங்குகிறது என்று பல வெளிநாட்டு நிறுவனங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.
புத்தாண்டில், உலகில் பல்வேறு நாடுகள் சீனாவுடன் கையோடு கை கோர்த்து, சீனாவுக்கு ஏற்றுமதி செய்து, எதிர்கால வளர்ச்சி வாய்ப்புகளை வெல்லலாம்.
