இந்திய அரசாங்கப் பத்திரங்களில் மேற்கொள்ளப்பட்ட அந்நிய முதலீடு இந்த ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் 9 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது.
இந்தத் தொகையானது 2023ஆம் ஆண்டுக்கான மொத்த முதலீட்டை விட அதிகமாகும். கடந்த ஆண்டு இந்தப் பத்திரங்களில் மொத்தமாக $8.21 பில்லியன் அந்நிய முதலீடு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கிளியரிங் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (CCIL) தரவுகளின் பகுப்பாய்வு மூலம் இந்த எண்ணிக்கை தெரியவந்துள்ளது.
முன்னதாக, செப்டம்பர் 2023 இல் ஜேபி மோர்கன் குறியீட்டில் உள்நாட்டு இறையாண்மைக் கடனைச் சேர்த்ததன் மூலம் இதில் அந்நிய முதலீடு அபரிமிதமான வளர்ச்சி கண்டு வருகிறது.
ஜேபி மோர்கன் நடவடிக்கைக்கு பிறகு, அரசாங்கப் பத்திரங்களுக்கு $13.26 பில்லியன் முதலீடு வந்துள்ளது.