9ஆவது குளிர்கால ஆசிய விளையாட்டுப் போட்டி அடுத்த ஆண்டின் பிப்ரவரி 7ஆம் நாள் முதல் 14ஆம் நாள், சீனாவின் ஹர்பின் நகரில் நடைபெற உள்ளது. அக்டோபர் 30 நாள், போட்டி துவங்குவதற்கு முன்பான 100வது நாளாகும்.
இந்த விளையாட்டு போட்டியில் பங்கேற்கும் விளையாட்டு அணிகள் சுறுச்சுறுப்பாக பயிற்சி செய்து வருகின்றன.
சீன விளையாட்டுத் தலைமைப் பணியகம் வெளியிட்ட தரவுகளின்படி, சீன பிரதிநிதிக் குழுவின் 170 விளையாட்டு வீரர்கள் இப்போட்டியின் 64 வகை போட்டிகளில் கலந்துகொள்ள உள்ளனர்.