சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஜுன் 29ம் நாள், பெய்ஜிங்கில் பெலாரஸ் அரசுத் தலைவர் லுக்கஷென்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது ஷிச்சின்பிங் கூறுகையில், சீனாவும் பெலாரஸும் அனைத்து காலங்களிலும் பன்முக நெடுநோக்கு கூட்டாளிகளாகும். பெலாரஸுடன் இணைந்து, மனித குலத்தின் பொது எதிர்காலச் சமூகத்தைக் கட்டி, 4 உலகளாவிய முன்மொழிவுகளைச் செயல்படுத்தி, ஐ.நா, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு முதலிய பலதரப்பு முறைமைகளிலான ஒருங்கிணைப்பையும் ஒத்துழைப்பையும் வலுப்படுத்த சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.
லுக்கஷென்கோ கூறுகையில், சீனாவுடன் நெடுநோக்கு தொடர்பை அதிகரித்து, ஒத்துழைப்பு துறைகளை விரிவாக்கி, இரு நாட்டுறவின் மேலதிக வளர்ச்சியை முன்னெடுக்க பெலாரஸ் எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
