மக்களை விட்டு நீங்காமல் புதிது புதிதாய் உருவெடுக்கும் கொரோனா. தற்போது இந்தியாவில் ஜே.என்.1, அமெரிக்காவில் எச்.வி.1 என்ற பெயரில் தொடர்கிறது.
உலகெங்கிலும் கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா பாதிப்பு மிக மோசமான ஒரு பாதிப்பை ஏற்படுத்தியது. அமெரிக்கா தொடங்கி உலகின் பல நாடுகள் கொரோனாவால் மொத்தமாக முடங்கிப் போனது.
கொரோனா பாதிப்பு இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இதற்கிடையே பல மாதங்கள் கழித்து இந்தியாவில் இப்போது கொரோனா பாதிப்பு திடீரென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவுவதற்குக் கேரளாவில் கொரோனா அதிகரிப்பதே இதற்குக் காரணமாகும்.
கேரளாவில் கடந்த மாதம் ஒட்டுமொத்தமாக 479 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. அதேநேரம் இந்த மாதம் முதல் எட்டு நாட்களில் மட்டும் 825 புதிய கேஸ்கள் பதிவாகியுள்ளன.
கேரளாவில் JN.1 என்ற புது வகை கொரோனா வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளது. இது Pirola அல்லது BA.2.86 வகை கொரோனாவை போலவே இருந்தாலும் அது சற்று வித்தியாசமானதாக உள்ளது.
இந்தியாவில் புது கொரோனா வேரியண்ட்களை கண்டுபிடிக்க மரபணு பகுப்பாய் சோதனை தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், அதிலும் கூட தப்பாமல் இந்த JN.1 பல காலம் மறைந்துள்ளது. இதன் காரணமாக வரும் காலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்குமோ என்றும் அஞ்சப்படுகிறது.
அதேபோல் அமெரிக்காவில் தற்போது HV.1 என்ற புது வகை கொரோனா வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவிலும் கொரோனாவால் அதிகமான அளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சுவாச வைரஸால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அமெரிக்காவில் HV.1 என்ற புது வகை கொரோனா மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
JN.1 என்ற புது வகை கொரோனாவின் அறிகுறிகள் :
காய்ச்சல், இருமல், சளி , சோர்வு, மூக்கடைப்பு, வயிற்றுப்போக்கு, தலைவலி ஆகும்.