சி.எம்.ஜி வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான சிறப்பு நடவடிக்கை செர்பியாவில் நடைபெற்றது

Estimated read time 1 min read

வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கான முன்னுரை, உலகளாவிய வசந்த விழா கலை நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பு எனும் சிறப்பு நடவடிக்கை, உள்ளூர் நேரப்படி, பிப்ரவரி 4ம் நாள், செர்பியாவின் பெல்க்ரேட் நகரில் நடைபெற்றது.

இந்நடவடிக்கையைச் சீன ஊடக குழுமம், செர்பிய பண்பாட்டு அமைச்சகம், செர்பியாவுக்கான சீனத் தூதரகம் முதலியவை கூட்டாக நடத்தின. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பரப்புரைத் துறையின் துணை அமைச்சரும் சீன ஊடக குழுமத்தின் தலைவருமான ஷென் ஹைய்சியோங், செர்பியாவுக்கான சீனத் தூதர், செர்பிய தேசிய பேரவையின் தலைவர், செர்பிய துணை தலைமை அமைச்சர் முதலியோர் இந்நிகழ்வில் பங்கெடுத்துள்ளனர்.

ஷென் ஹைய்சியோங் கூறுகையில், சீன ஊடகக் குழுமம் கடந்த 43 ஆண்டுகளில் தொடர்ந்து நடத்திய வசந்த விழா கலை நிகழ்ச்சி, சீனப் பண்பாடு மற்றும் வளர்ச்சி நிலைமையை அறிந்து கொள்ள உலகளாவிய மக்களுக்கு ஒரு ஜன்னலாகத் திகழ்கிறது. 5ஜி, செயற்கை நுண்ணறிவு முதலிய தொழில் நுட்பங்கள் பயன்படுத்தும் இவ்வாண்டின் கலை நிகழ்ச்சி, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பார்வையாளர்களுக்கு ஒரு கண்விருந்தை அளிக்கும் என்று தெரிவித்தார்.

 

Please follow and like us:

You May Also Like

More From Author