ஏஐயால் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்: ஆர்பிஐ துணை ஆளுநர் நம்பிக்கை  

Estimated read time 0 min read

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் மனிதர்களின் வேலைவாய்ப்பைப் பறித்துவிடும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்பிஐ) துணை ஆளுநர் பூனம் குப்தா ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துள்ளார்.
மும்பையில் உள்ள மத்திய வங்கி தலைமையகத்தில் பேசிய அவர், ஏஐ தொழில்நுட்பம் சில துறைகளில் வேலை இழப்புகளை ஏற்படுத்தினாலும், ஒட்டுமொத்தமாகப் புதிய வேலைவாய்ப்புகளையே அதிகம் உருவாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஆர்பிஐ நடத்திய சமீபத்திய ஆய்வில், தற்போது வரை வேலைவாய்ப்புகளில் எந்தவித எதிர்மறையான பாதிப்பும் ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author