பயணிகள் ஜெட் விமானங்களை தயாரிப்பதற்காக ரஷ்யாவுடன், இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
இந்தியா – ரஷ்யா உறவு பல ஆண்டுகளாகப் பரஸ்பர நம்பிக்கையுடனும், ஒத்துழைப்புடனும் நீடித்து வருகிறது.
குளிர்போருக்கு பிறகு இரு நாடுகளும் வலுவான தந்திர கூட்டாளிகளாகச் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாகப் பாதுகாப்பு துறையில் ரஷ்யா, இந்தியாவுக்கு ஆயுதங்கள், போர் விமானங்கள், அணு உலைகள் எனப் பல்வேறு துறைகளில் முக்கிய பங்காற்றுகிறது.
அப்படிப்பட்ட நிலையில், உலகளாவிய விமான பயணத்தை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்லும் ஒரு நடவடிக்கையாக ரஷ்யாவுடன் இந்தியா கைகோர்த்துள்ளது.
அதன்படி, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட், ரஷ்யாவால் வடிவமைக்கப்பட்ட பயணிகள் ஜெட் விமானத்தைத் தயாரிப்பதற்காக, யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷனுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாஸ்கோவில் வைத்துக் கையெழுத்திட்டுள்ளது.
