25ஆவது சீனச் சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சிக்கு ஷிச்சின்பிங் கடிதம்

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 8ஆம் நாள், 25ஆவது சீனச் சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகப் பொருட்காட்சிக்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.

இதில் அவர் கூறுகையில்,

இப்பொருட்காட்சி, திறப்பு வாய்ந்த உலக பொருளாதாரத்தைக் கட்டியமைப்பதற்கு ஆக்கப்பூர்வமாகப் பங்காற்றி, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு, பயனுள்ள ஒத்துழைப்பை ஆழமாக்குவதற்கான மேடையாக மாறியுள்ளது.

பல தரப்புகளுடன் இணைந்து, கூட்டு வெற்றி பெற்று, அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதாரத்தின் உலகமயமாக்கத்தை விரைவுபடுத்தி, செழுமையான வளர்ச்சியின் அருமையான எதிர்காலத்தைக் கூட்டாக படைக்க சீனா விரும்புகிறது என்று தெரிவித்தார்.

You May Also Like

More From Author