ரஷ்யாவின் பாஷ்கோர்டோஸ்தான் குடியரசில் உள்ள உஃபா நகரில் அமைந்துள்ள அரசு மருத்துவப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதியில், சனிக்கிழமை (பிப்ரவரி 8) அன்று நடந்த கொடூரமான கத்திக்குத்துத் தாக்குதலில் நான்கு இந்திய மாணவர்கள் உட்பட ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.
15 வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் கத்தியுடன் விடுதிக்குள் நுழைந்து அங்கிருந்த மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தகவல் அறிந்ததும் ரஷ்யாவிற்கான இந்தியத் தூதரகம் மற்றும் கசான் நகரில் உள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகள் உடனடியாக உதவிகளை வழங்க விரைந்துள்ளனர்.
