தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின், நேற்று காலை நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட தலைசுற்றலால், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மேலும் மூன்று நாட்கள் மருத்துவமனையில் ஓய்வாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.
72 வயதான முதல்வர் ஸ்டாலின், தினமும் காலையில் அடையாறு போட் கிளப் பகுதியில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.
நேற்று காலை நடைபயிற்சிக்கிடையே தலைசுற்றல் ஏற்பட்டது.
அதனால் நடைபயிற்சியை பாதியிலே முடித்த அவர், வீடு திரும்பிய பின்னர் வழக்கமான அரசியல் மற்றும் நிர்வாக பணிகளை மேற்கொண்டார்.
நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர் அன்வர் ராஜா திமுகவில் இணையும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின், தொடர்ந்து தலைசுற்றல் நீடித்ததால், ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
முதல்வர் ஸ்டாலினுக்கு மேலும் 3 நாட்கள் அப்போலோவில் சிகிச்சை தொடரும் என அறிக்கை
