நல்லிணக்க கடமையைச் செயல்படுத்தும் சீனக் கடல் படையின் அமைதிப் பெட்டகம் என்னும் மருத்துவக் கப்பல் டிசம்பர் 28ஆம் நாள் முற்பகல் 10 மணி அளவில், இலங்கையின் கொழும்பு துறைமுகத்திலிருந்து புறப்பட்டது.
“நல்லிணக்க கடமை-2024” என்ற பயணம் மற்றும் மருத்துவச் சேவை முற்றிலும் நிறைவடைந்துள்ளதை இது காட்டியுள்ளது.
7 நாட்கள் நீடித்த இக்கப்பலின் மருத்துவச் சேவையின் மூலம், இலங்கையில் 4700க்கும் மேலானோர் சிகிச்சை பெற்றனர். 51 அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இலங்கையின் பல்வேறு சமூக வட்டாரங்கள் இதற்கு பாராட்டு தெரிவித்தன.
மேலும், மருத்துவச் சேவையின்போது, சீன மருத்துவப் பணியாளர்கள், இலங்கையின் மருத்துவம், கல்வி, ஆராய்ச்சி ஆகியவற்றுடன் தொடர்புடைய இடங்களுக்குச் சென்று, ஆய்வு செய்தல், கலந்துரையாடல், பயிற்சிகள் உள்ளிட்ட வழிமுறைகளின் மூலம், பரிமாற்ற நிகழ்ச்சிகளை மேற்கொண்டனர்.