சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங் செப்டம்பர் 23ஆம் நாள் நியூயார்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் சீனாவின் தலைமையில் நடத்தப்பட்ட உலக வளர்ச்சி முன்மொழிவுக்கான உயர் நிலை கூட்டத்தில் பங்கேற்று உரைநிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த உலக வளர்ச்சி முன்மொழிவு என்பது கூட்டு வளர்ச்சியை முன்னேற்றுவதற்கு முக்கிய வழிக்காட்டல் பங்களிப்பை ஆற்றியுள்ளது. உலக வளர்ச்சிக்கான ஒதுக்கீட்டை சீனா தொடர்ந்து அதிகரித்து உலக வளர்ச்சியின் பசுமைமயமாக்க மாற்றத்தை ஆக்கப்பூர்வமாக முன்னேற்றும். மேலும், செயற்கை நுண்ணறிவு பிளஸ் என்ற சர்வதேச ஒத்துழைப்பு முன்மொழிவைச் சீன அரசு முன்வைத்துள்ளது. இதில் பல்வேறு தரப்புகள் ஆக்கப்பூர்வமாகக் கலந்து கொள்வதைச் சீனா வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த 4 உலக முன்மொழிவுகளுக்கும் ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை முன்மொழிவிற்கும் இக்கூட்டத்தில் பங்கேற்ற பல்வேறு தரப்புகள் ஆதரவளித்து உலக வளர்ச்சி முன்மொழிவுடன் மேற்கொள்ளப்பட்ட ஒத்துழைப்புகளில் ஈட்டியுள்ள சாதனைகளை வெகுவாகப் பாராட்டினர்.