கடல்பரப்பில் விண்கலத்தின் திரும்பும் கோது வெற்றிகரமாக மீட்பு!

Estimated read time 1 min read

குறைந்த உயரத்தில் லாங்மார்சு-10 ஏவூர்திகள் தொகுதியின் செயல்விளக்கம் மற்றும் அதிகபட்ச இயக்க அழுத்த நிலைமையில் மண்சோ எனும் மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலத்தின் பறத்தல் இடைநிறுத்தத்துக்கான ஆய்வை சீனா வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது.

பிப்ரவரி 11ஆம் நாள் நண்பகல், கடல் மீட்புக் குழு விண்கலத்தின் திரும்பும் கோதுவை மீட்டெடுத்துள்ளது. சீனா கடற்பரப்பில்  மனிதரை ஏற்றிச்செல்லும் விண்கலத்தின் கோதுவைத் தேடி மீட்டெடுப்பது இதுவே முதல்முறையாகும்.

எதிர்காலத்தில் விண்வெளி நிலையத்தின் வளர்ச்சி மற்றும் விண்வெளி வீரர்களின் சந்திர மண்டலப் பயணத் திட்டத்துக்கு இது முக்கிய அனுப்பவங்களை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author