மேற்கு வங்கத்தில் நிபா வைரஸ் பலி: நர்ஸ் உயிரிழந்ததால் பதற்றம்  

Estimated read time 0 min read

மேற்கு வங்க மாநிலம் வட 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள பாராசாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த செவிலியர் ஒருவர், நிபா வைரஸ் பாதிப்பால் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
இது அந்த மாநிலத்தில் பதிவான முதல் நிபா வைரஸ் மரணமாகும். உயிரிழந்த செவிலியருக்கு நுரையீரலில் இரண்டாம் நிலை தொற்று ஏற்பட்டதே மரணத்திற்கு முக்கியக் காரணம் என மாநில சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவருடன் சிகிச்சையில் இருந்த மற்றொரு செவிலியர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் கண்காணிப்பில் உள்ளார்.

You May Also Like

More From Author