அதிமுக கூட்டணியில் தேமுதிக – 5 தொகுதிகள் ஒதுக்கீடு!

மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை மார்ச் 20-ம் தேதி (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில், தமிழகம் முழுவதும் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் தொகுதி மற்றும் வேட்பாளர்கள் பெயர் இடம் பெற்றுள்ளது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தேமுதிக கூட்டணிக்கு ஐந்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தமிழகம் மற்றும் எஸ்டிபிஐ ஆகிய கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.

You May Also Like

More From Author