“திமுக தூர சக்தி… அதிமுக தீர்ந்து போன சக்தி! திமுக நம்மை எதிர்க்க எதிர்க்க… நம்மையே”- விஜய்

Estimated read time 1 min read

தமிழக வெற்றிக் கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் திருச்சி மாவட்ட மக்கள் சந்திப்பு மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்  நிகழ்ச்சி திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. 

தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கிய நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் விஜய், “மக்களவை தவறாக பேசினால் நான் கேள்வி கேட்பேன். தமிழ்நாட்டு மக்களின் ஒரே பிரதிநிதி நான் தான். எனக்கும் மக்களுக்கும் உள்ள பந்தத்தை யாராலும் கெடுக்க முடியாது. திமுக நம்மை எதிர்க்க எதிர்க்க… நம்மை அவமானப்படுத்த படுத்த.. அத்தனையும் நமக்கு நன்மையே. இன்றும் இரு சக்திகள் இடையில் தான் போட்டி, ஒன்று தூய சக்தி தவெக, தீய சக்தி திமுக. அதிமுகவும் திமுகவும் சோ்ந்து நம்மை ஆட்சியமைக்க விடாமல் தடுக்க முயன்றனா். ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம் அடுத்த வாரம் தொடங்கி வைக்கப்படும். இரண்டு கட்சிகளும் வேண்டாம் என எங்களை கொண்டு வந்துள்ளனர் மக்கள். தவெக ஆதரவு நிலைப்பாடு எடுத்த தலைவர்கள், இயக்கங்களுக்கு நன்றி” என்றார்.

You May Also Like

More From Author