தியானலிங்கத்திற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்யலாம்- ஈஷா அறிவிப்பு

Estimated read time 1 min read

ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் இந்தாண்டு முதன்முறையாக ஆதியோகி முன்பு இருக்கும் யோகேஷ்வர லிங்கத்திற்கு ‘மகா அபிஷேகம்’ நடைபெற உள்ளது.

https://youtu.be/KVcELgcwQPw?si=heF-IyvTNJuMiTcj

ஈஷாவில் இன்று மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் படையெடுத்துவருகின்றனர். ஈஷா மஹாசிவராத்திரி விழாவில் இந்தாண்டு முதன்முறையாக ஆதியோகி முன்புள்ள யோகேஷ்வர லிங்கத்திற்கு ‘மஹா அபிஷேகம்’ எனும் ஆன்மீக செயல்முறையை சத்குரு அர்ப்பணிக்க உள்ளார். ஆன்லைனில் இலவசமாக முன்பதிவு செய்து ஆதிசிவனின் அபிஷேகத்தை பார்க்கலாம் என ஈஷா நிர்வாகம் கூறியுள்ளது.

ஈஷா யோகா மையத்தில் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் தியானலிங்கத்தை தரிசிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இரவு முழுவதும் தியானலிங்கத்திற்கு பக்தர்கள் தங்கள் கைகளால் அபிஷேகம் செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

More From Author