டிரம்ப் – நெதன்யாகு இடையே விரைவில் சந்திப்பு?   

Estimated read time 0 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகிய இருவரும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்தித்துப் பேச ஒப்புக்கொண்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை (ஜூலை 3) இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.
இந்தச் சந்திப்பு எப்போது, எங்கு நடைபெறும் என்ற விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை என்றாலும், தற்போதைய உலக அரசியல் சூழ்நிலையில் இச்சந்திப்பு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author