சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 11ஆம் நாள், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவுடன் தொலைபேசி வழி தொடர்பு கொண்டார். அப்போது இருதரப்பினரும் சீன-அமெரிக்க உறவு மற்றும் இரு நாட்டு அரசுத் தலைவர்களுக்கிடையிலான பரிமாற்றம் குறித்து கருத்துகளைப் பரிமாறிகொண்டனர். இந்த உரையாடல் ஆக்கப்பூர்வமாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உரையாடலின் போது வாங்யீ கூறுகையில், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் செப்டம்பரில் அமெரிக்காவில் மேற்கொண்ட அரசு முறைப் பயணமானது வெற்றிகரமாக அமைந்தது, அப்போது, சீன-அமெரிக்க உறவு பற்றிய புதிய தொலைநோக்கின் உள்ளடக்கத்தை வளப்படுத்தி இரு நாட்டு அரசுத் தலைவர்கள் ஒருமனதாக ஒப்புக்கொண்டு, இரு நாடுகள் சரியாக பழகும் வழியை ஆராய்வதற்கு வழிகாட்டியுள்ளனர்.
அமெரிக்கா மீதான கொள்கைகளைச் சீனா தொடர்ந்து நிலைநிறுத்தி வருகிறது. அமெரிக்கத் தரப்புடன் இணைந்து பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதோடு, சர்ச்சையும் உணர்வுத் தன்மை வாய்ந்த பிரச்சினைகளையும் சீராகக் கையாள விரும்புகிறது. 2026 ஏபெக் அமைப்பின் பொருளாதாரத் தலைவர்களின் கூட்டம், ஜி20 உச்சிமாநாட்டை நடத்துவதில் ஒன்றுக்கு ஒன்று ஆதரவளிக்கவும், உத்திப்பூர்வ நிலைத்தன்மையுடைய ஆக்கப்பூர்மான சீன-அமெரிக்க உறவை நடைமுறைக்கு கொண்டு வந்து, அதன் பயன்களை வெளிக்கொணரவும் சீனா விரும்புகிறது என்றும் வாங்யீ தெரிவித்தார்.
