சீன ஊடகக் குழுமத்தின் செயற்கை நுண்ணறிவு கட்டிடத்தின் திறப்பு விழா 28ஆம் நாள் பெய்ஜிங்கில் நடைபெற்றது. சீன ஊடகக் குழுமத்தின் தலைமை இயக்குனர் ஷென் ஹெய்சியுங்கும், சீன தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையத்தின் துணைத் தலைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டனர்.
ஷென் ஹெய்சியுங் கூறுகையில்,
புதிய சுற்று அறிவியல் தொழில் நுட்ப புரட்சி மற்றும் தொழில் மாற்றத்தின் முக்கிய ஆற்றல் செயற்கை நுண்ணறிவு ஆகும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் சுட்டிக்காட்டினார்.
இக்கட்டிடம் இயங்க துவங்கியது, அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி மற்றும் சீன ஊடகக் குழுமத்தின் பணியின் மீது சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் முக்கிய கட்டளைகளை நடைமுறைப்படுத்தி, சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் நாட்டுக்கும் சேவை புரியும் முக்கிய நடவடிக்கையாகும் என்றார்.