வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லையென ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இதுவரை இருந்த அளவான 6.5%லேயே தொடருமென ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்ததாஸ் இன்று அறிவித்துள்ளார்.
இதனால் வீடு, வாகனக் கடன்களுக்கான EMI மாற்றமின்றி தொடரும்.
ரெப்போ விகிதம் என்பது வங்கிகளுக்கு RBI வழங்கும் கடனுக்கு விதிக்கப்படும் வட்டி விகிதமாகும்.
இந்த வட்டி விகிதம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கைக் குழு ஆலோசித்து நிர்ணயம் செய்வது.
இந்த ரெப்போ விகிதத்திற்கு ஏற்றவாறு வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் மாறும்.
அந்த வகையில், இன்று நடைபெற்ற RBIன் நிதிக் கொள்கைக் குழு ஆலோசனைக் கூட்டத்தில், ரெப்போ விகிதத்தில் மாற்றமேதும் இன்றி தொடர்வது என முடிவெடுக்கப்பட்டது.