சீன-ஹோண்டுராஸ் உறவு பற்றிய சீனாவின் நிலைப்பாடு

சீன-ஹோண்டுராஸ் தாராள வர்த்தக உடன்படிக்கைக்கான பேச்சுவார்த்தை துவங்குவதை, சீன வணிக அமைச்சர் வாங் வென்தாவும், ஹோண்டுராஸ் பொருளாதார வளர்ச்சி துறை அமைச்சர் ஃப்ரெடிஸ் செராடோவும் இரு நாட்டு அரசுகளின் சார்பில் ஜூலை 4ஆம் நாள் காணொளியின் மூலம் அறிவித்தனர்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மாவ் நிங் 4ஆம் நாள் கூறுகையில், ஹோண்டுராஸ் அரசுத் தலைவர் சீனாவில் பயணம் மேற்கொண்ட போது இரு நாட்டு அரசுத் தலைவர்கள் உருவாக்கிய முக்கிய பொதுக் கருத்து இதுவாகும். சீனாவும் ஹோண்டுராஸும் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட பிறகு பல்வேறு துறைகளிலுள்ள ஒத்துழைப்புகள் பன்முகங்களிலும் விரிவாகி வருகின்றன. ஹோண்டுராஸ் தரப்புடன் இணைந்து முயற்சிகளை மேற்கொண்டு, ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்புகள் மேலதிக சாதனைகளைப் பெறுவதை முன்னேற்றி, இரு நாட்டுறவுக்கு மேலும் இனிமையான எதிர்காலத்தை உருவாக்க சீனா விரும்புகிறது என்றார்.

Please follow and like us:

You May Also Like

More From Author