திபெத்திற்கு நேபாளத்தின் பசுந்தீவனம் ஏற்றுமதி

சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்திலுள்ள ரிகாசே நகருக்கு ஏற்றுமதி செய்யும் வகையில், 80 டன் எடையுள்ள முதல் தொகுதி பசுந்தீவனப் பொருட்களை ஏற்றிச் சென்ற 10 லாரிகள் ஜுலை 15ஆம் நாள் நேபாளத்தின் தெற்கிலுள்ள பாரத்பூர் நகரிலிருந்து புறப்பட்டன.
இந்தப் பசுந்தீவனப் போக்குவரத்துக்கான நிகழ்ச்சியில் நேபாளத்துக்கான சீனத் தூதர் சென் சொங் உரை நிகழ்த்தியபோது, சீனாவுக்கான நேபாளத்தின் பசுந்தீவன ஏற்றுமதி, இருநாட்டு முயற்சியின் விளைவாகும் என்று குறிப்பிட்டார். மேலும், நேபாளத்துடன் வேளாண் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்தி, நேபாளத்தின் நவீன வேளாண் அறவியல் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

You May Also Like

More From Author